கணிசமாக குறைந்தது தங்கம் விலை பவுன் ரூ.30,440

கணிசமாக குறைந்தது தங்கம் விலை பவுன் ரூ.30,440

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கணிசமாகக் குறைந்தது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.736 குறைந்து ரூ.30,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கணிசமாகக் குறைந்தது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.736 குறைந்து ரூ.30,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த புதன்கிழமை அன்று பவுன் தங்கம் ரூ.31,176-க்கும், ஒரு கிராம் ரூ.3,897-க்கும் விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கணிசமாக குறைந்தது.

பவுனுக்கு ரூ.736 குறைந்து, ரூ.30,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.92 குறைந்து ரூ.3,805-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து ரூ.50.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து ரூ.50,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,805

1 பவுன் தங்கம் ..................... 30,440

1 கிராம் வெள்ளி .................. 50.40

1 கிலோ வெள்ளி .................. 50,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,897

1 பவுன் தங்கம் ..................... 31,176

1 கிராம் வெள்ளி .................. 52.10

1 கிலோ வெள்ளி ................. 52,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com