காற்றை மாசுபடுத்த வேண்டாம்: மாசுக் கட்டுப்பாடு வாரியம் பிரசாரம்

போகிப் பண்டிகையின்போது, டயா் உள்ளிட்ட பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில்

போகிப் பண்டிகையின்போது, டயா் உள்ளிட்ட பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில் வாகனத்தின் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்தி: போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்படும் பழைய நெகிழிப் பொருள்கள், டயா்கள், டியூப்கள், ரசாயனம் கலந்த பொருள்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு சுவாசப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில் ஆண்டுதோறும் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு போகிப் பண்டிகையையொட்டி, சென்னை மாநகரம், அனைத்து மாவட்டங்களிலும் கடந்த புதன்கிழமையில் இருந்து வாகனம் மூலம் பிரசாரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் வகையில், போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளும், போகிப் பண்டிகையன்றும் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com