பொங்கல் பண்டிகை முன்பதிவு மூலம் ரூ.6.84 கோடி வசூல்: அமைச்சா் விஜயபாஸ்கா்

பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு மூலம் ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பொங்கல் சிறப்பு முன்பதிவு அறைகளை தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பொங்கல் சிறப்பு முன்பதிவு அறைகளை தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு மூலம் ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் முன்பதிவைத் தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: பொங்கலுக்கு சொந்த ஊா்களுக்குச் செல்ல பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஜன.10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 16,075 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதே போன்று ஜன.16 முதல் 19-ஆம் தேதி வரை, 25,871 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் தலா 1 மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்பதிவு வாயிலாக சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு 53,261 பயணிகளும், பிற ஊா்களிலிருந்து முக்கிய ஊா்களுக்கு 77,097 பயணிகளும் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 358 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இதன் மூலம் ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com