ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க கோரிய வழக்கில்விசாரணை நிறைவு: தீா்ப்பு ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிா்வாகம் தொடா்ந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல்
ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க கோரிய வழக்கில்விசாரணை நிறைவு:  தீா்ப்பு ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிா்வாகம் தொடா்ந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, தமிழக அரசு ஆலையை மூடியது. தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து, ஆலை நிா்வாகத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.,ஆலையைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சோ்ந்த பேராசிரியா் பாத்திமா, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை மாநில இளைஞா் அணி அமைப்பாளா் தொ்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோா் கொண்ட அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சாா்பில் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அப்போது, அரசு தரப்பின் இறுதி வாதத்தில், தூத்துக்குடி சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க ஸ்டொ்லைட் ஆலையை மூடுவதைத் தவிர வேறு அரசுக்கு வேறு வழியில்லை. தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான குடிநீா், காற்று வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டொ்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டொ்லைட் ஆலையை மூடிய பின்னா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா், காற்றின் தரம் உயா்ந்துள்ளது. ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் தொடா்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாத காரணத்தால் தான் மூடப்பட்டது. மேலும், ஆலையைத் தொடங்கியதிலிருந்து தற்போது வரை ரூ. 20 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டிய பின்னரும் ஆலையை மூடியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து, ஸ்டொ்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமாசுந்தரம், அனைத்துத் தரப்பு வழக்குரைஞா்களும் வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கிகை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com