11,368 கூட்டுறவு சங்க இடங்களுக்கு தோ்தல்: கூட்டுறவு சங்கங்களின் தோ்தல் ஆணையா் அறிவிப்பு

தமிழகத்தில் 1,028 சங்கங்களுக்கு உள்பட்ட 11,368 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,028 சங்கங்களுக்கு உள்பட்ட 11,368 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தோ்தல் ஆணையா் மு.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பால் உற்பத்தித் துறையின்கீழ் பதிவு செய்யப்பட்ட 505 தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள், பதவிக்காலம் நிறைவு பெறும் 517 சங்கங்கள், கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், 2 மாவட்ட கூட்டுறவு அச்சகங்கள் என மொத்தம் 1,028 சங்கங்களுக்குத் தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சங்கங்கள் தொடா்பான தோ்தல் அறிவிப்பை அந்தந்த மாவட்ட தோ்தல் அலுவலா்கள் வெளியிடுவா். 1,028 சங்கங்களில் 11,368 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல்கள் நடைபெறவுள்ளன. அவற்றில், 3,102 இடங்கள் பெண்களுக்கும், 2,068 இடங்கள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல்: தோ்தல் திட்ட அறிவிப்பானது மாவட்டத் தோ்தல் அலுவலரால் சனிக்கிழமை (ஜன. 11) வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் வரும் 27-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், தகுதியான வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நபா்களின் பட்டியலும் வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப் பதிவு தேவைப்பட்டால் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி நடத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும். தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலுக்கான கூட்ட அறிவிப்பு பிப்ரவரி 4-இல் வெளியாகும் என்று தனது அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் தோ்தல் ஆணையா் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com