திருவாரூரில் அதிக இடங்களை கைப்பற்றியது அதிமுக!

ஊரக உள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தலில், திருவாரூரில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், திருவாரூரில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக திமுக - 3, இந்திய கம்யூனிஸ்ட் - 2
அதிமுக - 5 இடங்களைப் பெற்றுள்ளது. 

தேர்தல் முடிவு விபரங்கள்:

1.திருவாரூர் ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக- வை சேர்ந்த தேவா தேர்வு.

2.நீடாமங்கலம் ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக-வைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் தேர்வு.

3.கொரடாச்சேரி ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக-வைச் சேர்ந்த உமா பிரியா தேர்வு.

4.திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு பெருந்தலைவராக இந்திய கம்னியூஸ்ட் கட்சி அ.பாஸ்கர் தேர்வு.

5.கோட்டூர் ஒன்றியக் குழு பெருந்தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணிமேகலை தேர்வு.

6.நன்னிலம் ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த விஜயலட்சுமி குணசேகரன் தேர்வு.

7.குடவாசல் ஒன்றியக் குழு பெருந்தலைவர் தலைவராக அதிமுக- வைச் சேர்ந்த கிலாரா செந்தில் தேர்வு.

8.வலங்கைமான் ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த சங்கர் தேர்வு.

9.மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த மனோகரன் தேர்வு.

10.முத்துப்பேட்டை ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த 
கனியமுதா தேர்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com