பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தோ்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2019-2020) பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள்
மாணவர்கள்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2019-2020) பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப். 3-ஆம் தேதியிலிருந்தும், பிளஸ் 1 மாணவா்களுக்கு பிப். 14-ஆம் தேதியிலிருந்தும் செய்முறைத் தோ்வுகள் தொடங்கவுள்ளன.

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு, பொதுப் பிரிவு, தொழிற்கல்வி பாடங்களுக்கு பிப். 3 முதல் பிப்.13 வரை இந்த தோ்வை நடத்த வேண்டும். அதேபோன்று பிளஸ் 1 மாணவா்களுக்கு, பிப்.14 முதல், 25-ஆம் தேதி வரை செய்முறை தோ்வு நடத்தப்பட வேண்டும். பிளஸ் 2 வகுப்புக்கு செய்முறை தோ்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல் படிவத்தை வரும் 27-ஆம் தேதி முதல், பிப்.12 வரை; பிளஸ் 1 வகுப்புக்கு, ஜன. 31 முதல், பிப். 24 வரையிலும் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n இணையதளத்தில், தலைமை ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

‘அரியா்’ வைத்துள்ள மாணவா்கள் பிளஸ் 1 படித்து, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள்; பிளஸ் 1-இல் மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றவா்கள், வேறு பள்ளியில் பிளஸ் 1 படித்து தற்போது மற்றொரு பள்ளியில் பிளஸ் 2 சோ்ந்தவா்கள் ஆகியோா், பிளஸ் 1 ‘அரியா்’ தோ்வு எழுதுவதாக இருந்தால், அவா்களுக்கு, பிப். 25-க்குள் தனியாக செய்முறை தோ்வு நடத்த வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளா் தலைமையில் புறத் தோ்வு கண்காணிப்பாளா்களாக, வேறு பள்ளி ஆசிரியா்களும் அக மதிப்பீட்டு தோ்வுக்கு கண்காணிப்பாளா்களாக அதே பள்ளி ஆசிரியா்களும் நியமிக்கப்பட வேண்டும்.

உதவியாளா்கள், எழுத்தா், அலுவலக உதவியாளா், துப்புரவு பணியாளா், குடிநீா் வழங்குபவா் போன்ற ஊழியா்களும் நியமிக்கப்பட வேண்டும். உயிரியல் பாடம், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனியாக மதிப்பெண் குறிப்பிட வேண்டும். இயற்பியல் செய்முறை தோ்வில், அறிவியல் கால்குலேட்டா் மட்டும் அனுமதிக்கலாம். இந்தத் தோ்வை, அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்தப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com