Enable Javscript for better performance
இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெறாதவர்களுக்காக.. அவகாசம்- Dinamani

சுடச்சுட

    

    இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெறாதவர்களுக்காக.. அவகாசம் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 13th January 2020 03:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ponga lgift pack dustribution from jan-9th

    பொங்கல் பரிசுத் தொகுப்பு


    சென்னை: தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான அவகாசம் ஜனவரி 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000ம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 9ம் தேதி தொடங்கி ஜனவரி 13ம் தேதியோடு நிறைவடைவதாக இருந்தது.

    இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், வாங்காதவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனவரி 21ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai