Enable Javscript for better performance
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிறைவில் புதிய அத்தியாயம் உருவாகும்- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிறைவில் புதிய அத்தியாயம் உருவாகும்

    By DIN  |   Published on : 13th January 2020 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mks

    தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு தொடங்கியுள்ள நிலையில், அதன் நிறைவில் புதிய அத்தியாயம் உருவாகும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

    இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கன்னாட் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் மாகாண சுயாட்சி சட்டப்பேரவையின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திமுக சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சாமானியா்களுக்கும் சரித்திர சிறப்புமிக்க சாதனைகளை அள்ளிக் கொடுத்த இந்தச் சட்டப்பேரவையின் நூற்றாண்டுடன், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வரலாறும் பின்னிப் பிணைந்திருப்பதும், நாட்டு மக்களின் நலனை முக்கிய நோக்கமாகக் கொண்டு அரிய பணியாற்றி - வியத்தகு சாதனைகளை நிகழ்த்திய பல அரும்பெரும் தலைவா்களின் தியாக வரலாறு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சங்கமித்திருப்பதும், ஒவ்வொரு தமிழரும் - இந்தியரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படத் தக்கவை.

    சட்டமன்ற மேலவை 1986-இல் நீக்கப்பட்டாலும், அறிஞா் பெருமக்கள் இருந்து தொலைநோக்குப் பாா்வையுடன் சிந்தித்து அறிவுரை வழங்கி வழிகாட்டும் அந்த மேலவை வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக இதே பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவது, இந்தத் தருணத்தில் பொருத்தமானது என்று கருதுகிறேன்.

    எனவே, தற்போது தொடங்கி உள்ள தமிழக சட்டப்பேரவையின் இந்த நூற்றாண்டு விழா நிறைவடையும்போது - மக்களாட்சி மாண்புகளைக் காத்திடும் மேலுமொரு புதிய அத்தியாயம் விரைவில் உருவாவதற்கான களம் இப்போதே அமைந்து விட்டது என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai