வண்டலூர் பூங்காவில் பொங்கலன்று பார்வையாளர்களை மகிழ்விக்க காத்திருக்கும் புது விருந்தாளிகள்!

வண்டலூர் பூங்காவில் பொங்கலன்று பார்வையாளர்களை வரவேற்க இரண்டு புதிய புலிக்குட்டிகள் காத்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
புலிக்குட்டிகள்
புலிக்குட்டிகள்

சென்னை: வண்டலூர் பூங்காவில் பொங்கலன்று பார்வையாளர்களை வரவேற்க இரண்டு புதிய புலிக்குட்டிகள் காத்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அறிஞர்அண்ணா உயிரியல் பூங்காவின் மக்கள் தொடர்பு அலுவலர் திங்களன்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 27 புலிகள் உள்ளன. அவற்றுள் ஆதித்யா மற்றும் ஆர்த்தி என்ற புலிகளுக்கு இரண்டு குட்டிகள் 18.09.2019 அன்று பிறந்தன. இவை இரண்டும் தொடர்ந்து தாய்ப் புலி மற்றும் மருத்துவ கண் பார்வையில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, தற்போது குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. பொங்கல் விடுமுறை தினத்தில் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் இந்த புலிக்குட்டிகளையும் அவற்றின் விளையாட்டையும் கண்டுகளிக்க சிறப்பு திரை பூங்கா வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தை மாதத்தில் சிறப்பாக கிடைக்கும் கரும்பு, பூங்காவில் உள்ள யானைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொங்கல் விடுமுறையில் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் காலை 11 மணியளவில் மற்றும் மதியம் 3 மணியளவில் யானையின் இருப்பிடத்தில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் விடுமுறையான 14.01.2020 முதல் 19.01.2020 வரை பூங்காவிற்கு வருகைத் தரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது- கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், கூடுதல் வாகன நிறுத்துமிடம், சிறப்பு சிற்றுண்டி கடைகள், கூடுதல் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், காணும் பொங்கல் அன்று பார்வையாளர்கள் குடும்பத்துடன் பூங்காவிற்கு சிரமமில்லாமல் வந்து செல்ல 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 14.01.2020 செவ்வாய் அன்று பார்வையாளர்களுக்கு பூங்கா திறந்திருக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com