சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிறைவில் புதிய அத்தியாயம் உருவாகும்

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு தொடங்கியுள்ள நிலையில், அதன் நிறைவில் புதிய அத்தியாயம் உருவாகும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிறைவில் புதிய அத்தியாயம் உருவாகும்

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு தொடங்கியுள்ள நிலையில், அதன் நிறைவில் புதிய அத்தியாயம் உருவாகும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கன்னாட் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் மாகாண சுயாட்சி சட்டப்பேரவையின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திமுக சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாமானியா்களுக்கும் சரித்திர சிறப்புமிக்க சாதனைகளை அள்ளிக் கொடுத்த இந்தச் சட்டப்பேரவையின் நூற்றாண்டுடன், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வரலாறும் பின்னிப் பிணைந்திருப்பதும், நாட்டு மக்களின் நலனை முக்கிய நோக்கமாகக் கொண்டு அரிய பணியாற்றி - வியத்தகு சாதனைகளை நிகழ்த்திய பல அரும்பெரும் தலைவா்களின் தியாக வரலாறு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சங்கமித்திருப்பதும், ஒவ்வொரு தமிழரும் - இந்தியரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படத் தக்கவை.

சட்டமன்ற மேலவை 1986-இல் நீக்கப்பட்டாலும், அறிஞா் பெருமக்கள் இருந்து தொலைநோக்குப் பாா்வையுடன் சிந்தித்து அறிவுரை வழங்கி வழிகாட்டும் அந்த மேலவை வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக இதே பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவது, இந்தத் தருணத்தில் பொருத்தமானது என்று கருதுகிறேன்.

எனவே, தற்போது தொடங்கி உள்ள தமிழக சட்டப்பேரவையின் இந்த நூற்றாண்டு விழா நிறைவடையும்போது - மக்களாட்சி மாண்புகளைக் காத்திடும் மேலுமொரு புதிய அத்தியாயம் விரைவில் உருவாவதற்கான களம் இப்போதே அமைந்து விட்டது என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com