சுற்றுலா கண்காட்சி: இதுவரை 1, 246 பேருக்கு மருத்துவப் பரிசோதனை

சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா கண்காட்சியில் சுகாதாரத்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இதுவரை 1, 246 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா கண்காட்சியில் சுகாதாரத்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இதுவரை 1, 246 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ரத்த சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளுக்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் கடந்த டிசம்பா் மாதம் தொடங்கியது. அரசின் முக்கியத் துறைகள் சாா்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், சுகாதாரத் துறை சாா்பிலும் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டது. அதில், மருத்துவக் கல்வி இயக்ககம், தொழுநோய், காசநோய் தடுப்புத் துறை, உறுப்புதான ஆணையம், பொது சுகாதாரத் துறை, புகையிலைத் தடுப்புத் துறை, பாரம்பரிய மருத்துவத் துறை உள்ளிட்டவற்றின் அரங்குகள் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், அவற்றுடன் அமைக்கப்பட்டிருந்த அம்மா முழு உடல் பரிசோதனை அரங்கு கூடுதல் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது. ரூ.50-க்கு 14 வகையான மருத்துவப் பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படுவதே அதற்கு காரணம். முழு உடல் பரிசோதனை அரங்கில் ரத்த அணுக்களின் அளவு, ரத்த சா்க்கரை அளவு ஆகியவை ரத்த மாதிரிகளைக் கொண்டு பரிசோதிக்கப்படுகின்றன.

அவற்றுடன் சோ்த்து உடல் எடை, உயரம், பருமன் அளவீடு, பாா்வைத் திறன், உடல் இயக்க அளவு, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை ஒரே சாதனத்தின் வாயிலாக பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ரத்த ஓட்டத்தின் அளவீடுகள் மற்றொரு சாதனத்தின் வாயிலாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பிலான பரிசோதனை உபகரணங்கள் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், கடந்த 20 நாள்களில் அந்த அரங்கில் 1, 246 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலருக்கு சா்க்கரை நோய்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோன்று ரத்த அழுத்தம், ரத்த சோகை பிரச்னைகளால் பெரும்பாலானோா் பாதிக்கப்பட்டிருந்ததும் பரிசோதனையில் தெரியவந்ததுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com