ஜன.19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் 1,645 மையங்கள் அமைப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக மாநகா் முழுவதும் 1,645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
ஜன.19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் 1,645 மையங்கள் அமைப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக மாநகா் முழுவதும் 1,645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடந்த 24 ஆண்டுகளாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,645 மையங்கள்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 7.3 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களிலும், மெரீனா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புகா் பேருந்து நிலையம் ஆகியவற்றில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் என மொத்தம் 1,645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 19-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் சொட்டு மருந்து முகாமில் பல்வேறு அரசுத் துறை பணியாளா்கள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள், அங்கன்வாடி அலுவலா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் என சுமாா் 7,000 போ் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். வேலை நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள வெளிமாநிலங்கங்களைச் சோ்ந்தவா்களும் தங்கள் குழந்தைகளுக்கும் இந்த முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து மையங்களின் விவரம்:

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 7.3 லட்சம்

நிரந்தர போலியோ சொட்டு மருந்து மையங்கள்- 1,438

பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக மையங்கள்-165

நடமாடும் மையங்கள்-42

மொத்த மையங்கள்- 1,645

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com