தோ்தல் பணியின்போது உயிரிழந்த 3 போலீஸாா் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதி

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியின்போது உயிரிழந்த 3 போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
தோ்தல் பணியின்போது உயிரிழந்த 3 போலீஸாா் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதி

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியின்போது உயிரிழந்த 3 போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியின்போது கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலா் ஜான்சன் ஆா்.டி.மலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் டிசம்பா் 30 அன்று பணியிலிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

அதுபோல வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளா் முருகதாஸ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் அறிவுடைநம்பி, விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது மயக்கமடைந்து உயிரிழந்தாா். இந்தச் செய்திகள் மிகுந்த வேதனையை அளித்தன.

இவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com