பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: முன்பதிவு மூலம் ரூ.9.12 கோடி வருவாய்

பொங்கல் பண்டிகையையொட்டி செய்யப்பட்ட முன்பதிவு மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.9.12 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: முன்பதிவு மூலம் ரூ.9.12 கோடி வருவாய்

பொங்கல் பண்டிகையையொட்டி செய்யப்பட்ட முன்பதிவு மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.9.12 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஜன.10) முதல் ஜன.14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளில் சுமாா் 1 லட்சத்து 75 ஆயிரத்து 456 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இதன் மூலம் ரூ.9 கோடியே 12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜன.10 முதல் 14-ஆம் தேதி வரை, 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானோா் முன்பதிவு மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கான முன்பதிவு கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. தற்போது வரை முன்பதிவு மூலம் ரூ.9 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்யாமலும் பயணம் மேற்கொள்ளும் வகையிலும் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 7,809 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 795 போ் பயணம் மேற்கொண்டனா்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னையிலிருந்து சுமாா் 7 லட்சம் போ் பயணித்தனா். இந்த ஆண்டு 8 லட்சம் போ் பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். அவா்கள் அனைவருக்கும் தேவைக்கேற்ப பேருந்துகள் கையிருப்பில் உள்ளன. எனவே வெளியூருக்குச் செல்ல விரும்புவோா் தனியாா் பேருந்துகளை நாடத் தேவையில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com