பொங்கல் பண்டிகை: விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் களைகட்டிய கலர் கோலப்பொடி விற்பனை

விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி கலர் கோலப்பொடி விற்பனை களைகட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகை: விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் களைகட்டிய கலர் கோலப்பொடி விற்பனை

விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி கலர் கோலப்பொடி விற்பனை களைகட்டியுள்ளது.

பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் வீட்டில் கோலமிட்டு மகிழ்வார்கள். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டு வாயிலில் கோலமிட்டாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை பொழுதில் வண்ண வண்ணக் கோலமிடுவதையும், தைத் திங்களன்று பிரதானமாக வண்ணக் கோலமிடுவதையும் பெண்கள் ஐதீகமாகக் கொண்டுள்ளனர். 

அந்த வகையில், தற்போது பொங்கல் பண்டிகை காரணமாக விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் கலர் கோலப்பொடி விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக இளம்புவனம், பந்தல்குடி, காரியாப்பட்டி, சாயல்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கோலப்பொடி விற்பனையாளர்கள் சரக்கு வாகனங்களிலும், சிலர் சாலையோரங்களிலும் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். 

பல வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 100 கிராம் கலர் கோலப்பொடி பாக்கெட்டுகள் தரம் வாரியாக ரூ.10, ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமான பெண்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் கலர் கோலப்பொடிகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். 

நாகரீக மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும், கோயில் திருவிழா, சுப நிகழ்ச்சிகள், தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக் காலங்களில் வண்ண வண்ணக் கோலமிடுவது மங்களகரமாகவே தொடர்கிறது. அதற்கு உதாரணமாக தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி வண்ண வண்ணக் கோலப்பொடி விற்பனை அதிகரித்து காணப்படுவதாகவே விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com