Enable Javscript for better performance
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 11 பிரிவுகளாக காளைகளை நிறுத்த நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 11 பிரிவுகளாக காளைகளை நிறுத்த நடவடிக்கை

    By DIN  |   Published on : 14th January 2020 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை நிறுத்துவதற்கு 11 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகள் நெரிசலின்றி செல்வதற்கும், காளைகளை வசதியாக நிறுத்துவதற்கும் ஏதுவாக அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி-திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பு வரை 11 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதில், 1-ஆம் பிரிவிலிருந்து 8-ஆம் பிரிவு வரை ஒவ்வொரு பிரிவிலும் தலா 50 காளைகள் வீதம் 400 காளைகளும், 9-ஆம் பிரிவிலிருந்து 11-ஆம் பிரிவு வரை தலா 100 காளைகள் வீதம் 300 காளைகள் நிறுத்துவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளன.

    எனவே, வெளியூரிலிருந்து மதுரை மாநகருக்குள் வாகனத்தில் அழைத்து வரப்படும் காளைகள் அனைத்தும், திருப்பரங்குன்றம் சாலை வழியாக முத்துப்பட்டி சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும். பின்னா், காளைகளுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணின்படி சம்பந்தப்பட்ட பிரிவில் காளைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாகனங்களை முத்துப்பட்டி சந்திப்பிலிருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் மற்றும் வெள்ளைக்கல் பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறின்றி நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, காளையின் உரிமையாளா்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

     

    அலங்காநல்லூா் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் தலா 700 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரா்கள் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு 926 பேரும், பாலமேட்டுக்கு 936 பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai