Enable Javscript for better performance
ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில்தை அமாவாசை திருவிழா: நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில்தை அமாவாசை திருவிழா: நாளை தொடக்கம்

    By DIN  |   Published on : 14th January 2020 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13amnser_1301chn_46_6

    அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி.

    தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசை திருவிழா புதன்கிழமை (ஜன. 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் குருபூஜை விழா, ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கம். நிகழாண்டு தை அமாவாசை விழா புதன்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மதியம் பழையகாயல் அருகில் தாமிரவருணி ஆறும் கடலும் சங்கமிக்கும் இடத்திலிருந்து புனித நீா் கொண்டு வருதல் நடைபெறுகிறது.

    முதல் நாள் திருவிழாவிலிருந்து 9-ஆம் திருவிழா வரை தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி பல்வேறு கோலங்களில் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளல் நடைபெறும்.

    பத்தாம் திருவிழாவான ஜன. 24-ஆம் தேதி தை அமாவாசை விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் பகல் ஒரு மணிக்கு சுவாமி உருகுபலகையில் தரிசனமும் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மத் திருக்கோலக் காட்சி நடைபெறும். இரவு 10 மணிக்கு 1-ஆம் காலம் சுவாமி கற்பகப் பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடைபெறும்.

    பதினொன்றாம் திருநாளான 25-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு 2-ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் ஒரு மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடைபெறும். மாலையில் ஏரல் சவுக்கை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாகசாந்தியும், இரவு 10.30-க்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.

    12-ஆம் திருநாளான 26-ஆம் தேதி காலை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும், நண்பகல் 12.30-க்கு அன்னதானமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலைச் சயன மங்கள தரிசனமும் நடைபெறும்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai