மணமான பெண் இறந்தால் தாயாரை வாரிசாகக் கருத முடியாது: உயர் நீதிமன்றம்

மணமான பெண் இறந்தால், அவரது தாயாரை சட்டப்படி வாரிசாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்


சென்னை: மணமான பெண் இறந்தால், அவரது தாயாரை சட்டப்படி வாரிசாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரிசுரிமை சட்டப்படி ஒரு மணமான ஆண் இறந்தால் அவரது மனைவி, குழந்தைகள், தாய் ஆகியோர் சட்டப்பூர்வ வாரிசுகள். ஆனால், மணமான பெண் இறந்துவிட்டால் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள்தான் சட்டப்படி வாரிசுகளாவார்கள். அவரது தாயாரை வாரிசாகக் கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயநாகலட்சுமி என்பவரின் வாரிசு சான்றிதழில் அவரது தாயாரின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது குறித்த வழக்கில், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15க்குள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com