Enable Javscript for better performance
தமிழகம் முதன்மை மாநிலமாக மாறி வருகிறது: முதல்வர் பழனிசாமி பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் முதன்மை மாநிலமாக மாறி வருகிறது: முதல்வர் பழனிசாமி பேட்டி

    By DIN  |   Published on : 14th January 2020 03:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cmeps


    சேலம்: தமிழகம் முதன்மை மாநிலமாக மாறி வருகிறது என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

    சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். மக்கள் அளிக்கும் தீர்ப்பு எங்களுக்கு நியாயமானது.

    எதிர்கட்சித் தலைவர் மட்டும் குறை சொல்லி வருகிறார், தேவையில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருவது வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றார். 

    மேலும், தமிழகத்தில்  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.  யாரும் அச்சப்படத் தேவையில்லை இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை.  குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களை யாரும் ஈடுபட வேண்டாம் என்று  கூறினார். 

    தமிழகம் அமைதிப் பூங்கா: பொன் ராதாகிருஷ்ணன் குறித்த கருத்துக்கு பதிலளிக்கையில், அமைச்சர் ஜெயகுமாரின்  கருத்தே என்னுடைய கருத்து என பதிலளித்த முதல்வர், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இதனை சீர்குலைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்று உள்ளது. தேர்தல் அலுவலர்கள் அனைத்து கட்சியின் முகவர்கள் முன்னிலையில் வாக்குகளை எண்ணியுள்ளனர்.  இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. 
    அரசு அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட்டுள்ளனர். 

    மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார் என்று கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai