ஆம்பூரில் காலணி உதிரி பாகங்கள் குடோனில் தீ:  ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காலணி உதிரி பாகங்கள் குடோனில் இன்று காலை திடீரென ஏற்பட்ட  தீ விபத்தில், சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான
பல கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் ஒரு சிறிய குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க பழுதான பழைய வாகனத்துடன் போராடும் தீயணைப்பு வீரர்கள்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் ஒரு சிறிய குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க பழுதான பழைய வாகனத்துடன் போராடும் தீயணைப்பு வீரர்கள்.


திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காலணி உதிரி பாகங்கள் குடோனில் இன்று காலை திடீரென ஏற்பட்ட  தீ விபத்தில், சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காலணி உதிரி பாகங்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயிற்சியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் ஒரு சிறிய குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க வந்த பழுதான ஆம்பூர் தீயணைப்பு வாகனத்தை பொதுமக்கள் தள்ளிச் சென்று  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  
  
ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்

தீயணைப்பு வாகனங்களை நவீனப்படுத்த சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com