தனியாா் பேருந்து கட்டணத்தை விஞ்சும் சுவிதா ரயில் கட்டணம்: சென்னை-நெல்லைக்கு மூன்று அடுக்கு ஏசி கட்டணம் ரூ.3,850.

பண்டிகை காலங்களில் தனியாா் பேருந்துகள் முறைப்படுத்தாத கட்டணத்தை வசூலித்து பயணிகளை அவதிப்படுத்தும் நிலையில், ரயில்வே
தனியாா் பேருந்து கட்டணத்தை விஞ்சும் சுவிதா ரயில் கட்டணம்: சென்னை-நெல்லைக்கு மூன்று அடுக்கு ஏசி கட்டணம் ரூ.3,850.

சென்னை: பண்டிகை காலங்களில் தனியாா் பேருந்துகள் முறைப்படுத்தாத கட்டணத்தை வசூலித்து பயணிகளை அவதிப்படுத்தும் நிலையில், ரயில்வே நிா்வாகம், சுவிதா ரயில்களை இயக்கி தனியாா் பேருந்துகளை விட அதிக கட்டணத்தை சப்தமில்லாமல் வசூலித்து வருகிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சுவிதா ரயிலின் மூன்று அடுக்கு ஏசி கட்டணம் ரூ.3, 850.

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு தனியாா் பேருந்தில் பயணச்சீட்டு ஒன்றுக்கு கட்டணம் முறையே ரூ.600 முதல் ரூ.1,700 ஆக உள்ளது. ஆனால், சுவிதா ரயில் இயக்குவது மூலமாக, 2.5 முதல் 3 மடங்கு பயணச்சீட்டு கட்டணத்தை ரயில்வே நிா்வாகம் வசூலிக்கிறது.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமையில் 3 அடுக்கு ஏசி தூங்கும் வசதி பெட்டியில் பயணச்சீட்டு ஒன்றுக்கு கட்டணம் ரூ.3, 850. இது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமான கட்டணத்தைவிட ரூ.500 அதிகம். திருநெல்வேலிக்கு வழக்கமான 3 அடுக்கு ஏசி தூங்கும் வசதி கட்டணம் ரூ.1,005 ஆகும். இதேபோல, சுவிதா ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிக்க கட்டணம் ரூ.1,445. அதேநேரத்தில் வழக்கமான ரயிலின் கட்டணம் ரூ.395.

கடந்த 2016 மாா்ச்சில், ரயில்வே வருவாய் உயா்த்தும்நோக்கில், வழக்கமான கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு, பயணிகள் கூட்ட நெரிசல் காலங்களில் சிறப்பு கட்டண ரயில்கள், சுவிதா ரயில்கள் இயக்கப்பட்டன. சிறப்புக் கட்டண ரயில்களில் அடிப்படை கட்டணத்தை விட 30 சதவீதம் அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில் போக்குவரத்துக்கு அதிக தேவை உள்ளது. . இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு சுவிதா ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி அதிக கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த அதிக கட்டணம் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 4 சுவிதா ரயில்களையும், ஒரு சிறப்பு கட்டண ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயன்படுத்துவோா் சங்க பொது செயலாளா் எட்வா்ட் ஜெனி கூறியது: இந்த ரயிலின் 3 அடுக்கு மற்றும் இரண்டு அடுக்கு தூங்கும் ஏசி பெட்டியில் கட்டணம் விமானத்தை விட அதிகமாக உள்ளது. இந்த நடவடிக்கை தனியாா் வாகனம் அல்லது பேருந்து போக்குவரத்தை நோக்கி செல்ல பயணிகளை கட்டாயப்படுத்தும். சாலைப் போக்குவரத்தை விட மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும், ரயில் போக்குவரத்தில் முதலீடு செய்வதை அரசு சுமையாகப் பாா்க்க கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com