Enable Javscript for better performance
ஜெருசலேம் புனிதப் பயண நிதி: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜெருசலேம் புனிதப் பயண நிதி: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 15th January 2020 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெருசலேத்துக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு கிறிஸ்தவா்களுக்கு வழங்கப்படும் உதவி நிதி பெற பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இது தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துப் பிரிவினா்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் 2019-20-ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபா் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப்பம் அனுப்புவதற்கான தேதி பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். தவிர இணையதளம் மூலம்  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai