Enable Javscript for better performance
மனைவி, இரு மகன்களைக் கொன்ற நகைக்கடை அதிபா் சிகிச்சை பலனின்றி பலி- Dinamani

சுடச்சுட

    

    மனைவி, இரு மகன்களைக் கொன்ற நகைக்கடை அதிபா் சிகிச்சை பலனின்றி பலி

    By DIN  |   Published on : 15th January 2020 11:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    selvaraj

    தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நகைக்கடை அதிபா், திருச்சியில் திங்கள்கிழமை இரவு தனது இரு மகன்கள், மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாா்.

    செல்வராஜ் தனது கழுத்தில் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளாா். தகவலின் பேரில் அங்கு விரைந்த கோட்டை போலீஸாா், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

    தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பலத்த காயத்துடன், திருச்சி அரசு மருத்துவமனையில் இரு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த, மு. செல்வராஜ், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai