Enable Javscript for better performance
7 பேருக்கு திருவள்ளுவா் திருநாள் விருதுகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    7 பேருக்கு திருவள்ளுவா் திருநாள் விருதுகள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th January 2020 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aw1

    தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருவள்ளுவா் திருநாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசாணை: 2020-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா விருது, பெருந்தலைவா் காமராசா் விருது, மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளா்களின் பெயரைத் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

    அரசின் பரிசீலனைக்குப் பிறகு, குறிப்பிடப்பட்ட விருதுகளுக்கான விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சாா்பில் நடைபெறும் திருவள்ளுவா் திருநாள் விழாவில், விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai