கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் வருத்தப்பட ஒன்றுமில்லை: துரைமுருகன்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் வருத்தப்பட ஒன்றுமில்லை: துரைமுருகன்


திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் சார்பில் இன்று (புதன்கிழமை) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிதத்தார். 

அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு பாரபட்சம் காட்டுவதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் அழகிரி கூறிய கருத்து குறித்து அவர் பேசியதாவது:

"கூட்டணியில் உள்ள யாருக்கும் திமுக பாரபட்சம் காட்டுவது இல்லை. திமுகவுக்கு என்று ஒரு கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். யாரையும் வெளியே போ என்று நாங்கள் வெளியேற்றுவது இல்லை. ஆனால் அவர்களாக போனால் நாங்கள் கையைப் பிடித்து போகாதே என் கணவா என்று ஒப்பாரி பாடுவது இல்லை. 

எங்கள் கூட்டணியில் இருக்கும் வரை உரிய மரியாதையோடுதான் நடத்தி வருகிறோம். இனியும் அப்படிதான் நடத்துவோம். அவர்களாக முடிவு பண்ணி வேறு அணிக்குச் சென்றாலோ, வேறு நிலை எடுத்தாலோ அதற்கு திமுக பொறுப்பல்ல. நாங்கள் யாரையும் வெளியே போ என சொல்வது இல்லை அவர்களாகப் போனால் வருதப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

தற்போதைக்கு காங்கிரஸ் எங்களோடுதான் உள்ளது, இன்னும் பிரியவில்லை" என்றார்.

இதையடுத்து முரசொலி, துக்ளக் குறித்து ரஜினி பேசியது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, "ரஜினி ஒவ்வொரு நாளில் ஒவ்வொன்று சொல்கிறார். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com