Enable Javscript for better performance
திருவாரூர் அருகே ஊர் கூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு கிராம மக்கள் மகிழ்ச்சி!- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே ஊர் கூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு கிராம மக்கள் மகிழ்ச்சி!

    By DIN  |   Published on : 15th January 2020 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    village_celebrate_pongal_in_tiruvarur_1

     

    தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    விவசாயி தான் பயிரிட நெல்மணிகளை எடுத்து அந்த அரிசியை பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்மூலமாக விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பொங்கும் என்பது ஐதீகம்.

    திருவாரூர் அருகே சேர்ந்தனங்குடி கிராமத்தில், ஊர் கூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருவாரூர் அருகே உள்ளது சேர்ந்தனங்குடி கிராமம். இந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகை அனைத்து தரப்பு மக்களும் இணைந்து, அங்குள்ள படைவெட்டி மாரியம்மன் கோவில் முன்பு புதன்கிழமை காலை பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் வைத்து, மாவிலை தோரணம் செங்கரும்பு வாழைமரம் என கோவிலை சுற்றி கட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை  செய்து வழிபாடு நடத்தினர்.

    வீடுகள் தோறும் பொங்கல் இட்டாலும் ஊர் ஒற்றுமையையும் நன்மையை வலியுறுத்தியும் இந்த பொங்கல் பண்டிகை சேர்ந்தனங்குடி கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்தியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai