இந்த ஞானம் ஏன் அப்போது தோன்றவில்லை: துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் வருத்தப்பட ஒன்றுமில்லை என்ற துரைமுருகனின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி தந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் வருத்தப்பட ஒன்றுமில்லை என்ற துரைமுருகனின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி தந்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்குப் புறம்பாக திமுக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இதனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகப் பேசப்பட்டது.

இந்த சூழலில், திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் வருத்தப்பட ஒன்றுமில்லை என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், துரைமுருகனின் இந்தக் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் விமரிசனம் தெரிவித்துள்ளார். துரைமுருகன் பேசிய விடியோ காட்சியை டிவிட்டரில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ள அவர்,

"இந்த ஞானம் ஏன் வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன் தோன்றவில்லை" என்று விமரிசித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com