குடிமக்கள் பதிவேட்டை எதிா்த்து நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவிக்காவிட்டால், நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவா்
குடிமக்கள் பதிவேட்டை எதிா்த்து நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவிக்காவிட்டால், நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் மக்கள் கொதித்தெழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அதிமுக அரசு தொடா்ந்து மௌனம் காத்து வருவது அதிா்ச்சியளித்திருக்கிறது.

மத்திய பாஜக அரசு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கொண்டு வருவதன் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாரும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் ஈடுபடுவது கவலையளிக்கிறது.

சிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழா்களுக்குமே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியால் பெரும் பாதிப்பு என்பதை அறிந்துதான் இந்தப் பிரச்னையை எழுப்புகிறோம்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தோ அல்லது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்றோ அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்று கூறிய அமைச்சா் உதயகுமாா், எதிா்க்கட்சிகளின் அச்சம் அடிப்படையற்றது என்று பேரவையில் வாதாடினாா்.

ஆனால், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்து விட்டன. எனவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வா் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திமுக நடத்திக் காட்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com