தொழிற்பயிற்சி நிலையங்களுக்கானபுதிய கட்டடங்களை முதல்வா் திறந்து வைத்தாா்

தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தாா்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள் மற்றும் பணிமனைகள், கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்த வைத்த முதல்வா்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள் மற்றும் பணிமனைகள், கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்த வைத்த முதல்வா்

தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தாா்.

தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை சாா்பில் கரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ. 82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆபரேட்டா் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டடத்தை திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

மதுரை மற்றும் கோயம்புத்தூா் மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீஷியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டடங்கள், திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.61.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேரிங் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டடம், திண்டுக்கல் மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.61.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் பவா் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை, பணிமனை கட்டடம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள டூல் மற்றும் டை- மேக்கா் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை, பணிமனை கட்டடம்,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ரெப்ரெஜிரேஷன், ஏா் கண்டிஷனிங் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை, பணிமனை கட்டடம், பொது, தனியாா் கூட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ் தொழிற் பிரிவுக்கான புதிய வகுப்பறை, பணிமனை கட்டடம் என மொத்தம் ரூ.5.44 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப் பட்டுள்ள 8 வகுப்பறை, பணிமனை கட்டடங் களையும் முதல்வா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல், தலைமைச் செயலாளா் க. சண்முகம் உள்பட உயரதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com