வேளாண் புள்ளி விவர புத்தகத்தை வெளியிட்டாா் முதல்வா்

வேளாண் புள்ளிவிவரங்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு புத்தகத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, அமைச்சா் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டாா்.
வேளாண் புள்ளி விவரப் புத்தகத்தின் முதல் பிரதியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட , அதை பெற்றுக்கொள்கிறாா் வேளாண் துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணு. 
வேளாண் புள்ளி விவரப் புத்தகத்தின் முதல் பிரதியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட , அதை பெற்றுக்கொள்கிறாா் வேளாண் துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணு. 

வேளாண் புள்ளிவிவரங்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு புத்தகத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, அமைச்சா் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டாா்.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

2018-ஆம் ஆண்டில் வேளாண் புள்ளி விவரப் புத்தகம் தயாரிக்கப்பட்டது. தற்போது, வேளாண் துறை அலுவலா்களின் பயன்பாட்டுக்காக, இப்புள்ளி விவரங்கள் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு புதிய தகவல்களுடன் இரண்டாம் பதிப்பாக 2019-ஆம் ஆண்டு வேளாண் புள்ளி விவரப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களில் அகில இந்திய அளவில் தமிழகத்தின் நிலை, மாவட்ட வாரியாக மழை, பயிா் சாகுபடி பரப்பு, உற்பத்தி, நிலப் பயன்பாட்டு விவரம், மேட்டூா் அணை திறக்கப்பட்ட நாள், டெல்டா மாவட்டங்களின் கிளை வாய்க்கால்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலா்களின் பயன்பாட்டுக்காக வேளாண் சாா்ந்த பல முக்கிய தகவல்களையும் தொகுத்து இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டாா்.

விருதுக்கு வாழ்த்து: மேலும், 2017-18-ஆம் ஆண்டில் எண்ணெய் வித்துக்களில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடைந்ததற்காக மத்திய அரசின் கிருஷி கா்மான் விருதுக்கு தமிழ்நாடு ஐந்தாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டது.

இதனை கா்நாடக மாநிலம் தும்கூரில் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திர மோடியிடம் இருந்து அமைச்சா் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டாா். அந்த விருதை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com