கம்பம் நந்தகோபாலன் சுவாமி கோயிலில் பட்டத்துக் காளைக்கு வழிபாடு!

தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் சுவாமி கோயிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, பட்டத்துக் காளைக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.
கம்பம் நந்தகோபாலன் சுவாமி கோயிலில் பட்டத்துக் காளைக்கு வழிபாடு!

தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் சுவாமி கோயிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, பட்டத்துக் காளைக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.

கம்பத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் தொண்மை வாய்ந்த நந்தகோபாலன் சுவாமி கோயில் மற்றும் தம்பிரான் தொழுவின் பராமரிப்பில் 600-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் உள்ளது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை.2-ம் நாள் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெறும். விவசாயிகள் நேர்த்திக் கடனாகவும், தொப்புள் கொடி சுற்றி பிறந்த தலைச்சான் கன்றுகளையும் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர். தொழு மாடுகளுக்குள் பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படும்.

கம்பம் நந்தகோபாலன் சுவாமி கோயில்

இக்கோயிலில் தொழு மாடுகள் மற்றும் பட்டத்துக் காளை பிரதானமாக வழிபடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு கம்பம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் புத்தாடை அணிந்து, கையில் கரும்புத் தட்டை ஏந்தி கோயிலுக்குச் சென்று அலங்கரிக்கப்பட்ட பட்டத்துக் காளையை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com