Enable Javscript for better performance
மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு- Dinamani

சுடச்சுட

    
    nk_7_jalli_0701chn_122_8

    கோப்புப் படம்

     

    மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தைப் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

    இந்த நிலையில், மதுரை பாலமேட்டில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.

    900-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் மொத்தம் 700 காளைகள் பங்கேற்றுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்படுவர். புது நபர் களத்தில் இறங்கும் போது அவர்களை அடையாளம் காண்பதற்கு ஏற்ற வகையில் விதவிதமான வணங்களில் பனியன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மதுரை பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகளும், 936 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். காளைகள், காளையர்களுக்கும் போட்டித் தொடங்கும் முன்பு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக, அவனியாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 காளைகளை அடக்கி விஜய் என்பவர் முதலிடம் பிடித்தார்.

    ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் போலீஸாருக்கு மேல் அங்கு குவிந்துள்ளனர். இன்றைய ஜல்லிக்கட்டில் இதுவரை மூவர் காயமடைந்துள்ளனர். இருவர் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai