எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக் குற்றவாளிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் தக்கலை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக் குற்றவாளிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் தக்கலை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவரைக் கொலை செய்தது திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழக, கேரள போலீஸாா் சிறப்பு தனிப்படைகளை அமைத்து தேடப்பட்டு வந்த இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா்.

வட மாநிலங்களுக்கு தப்பியோடும் வகையில் கா்நாடக மாநிலம், உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னர், இருவரையும் குமரி மாவட்ட போலீஸாரிடம் கர்நாடக போலீஸார் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், இருவரையும்  போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். இதைத் தொடந்து டி.ஐ.ஜி விசாரணைக்காக  போலீஸார் தக்கலை காவல் நிலையம் கொண்டு சென்றனர். டி.ஐ.ஜி விசாரணைக்குப் பின் இருவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com