மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் தமிழக பாஜக

காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழ்நாடு பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் தமிழக பாஜக


சென்னை: காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழ்நாடு பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, காவி நிற உடையுடன் திருவள்ளுவர் புகைப்படத்தை வைத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து அவர் அதனை மாற்றினார்.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் காவி நிற திருவள்ளுவர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம், காவி நிற உடையுடன் திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது சர்ச்சையான நிலையில், திருவள்ளுவர் தினமான இன்று மீண்டும் அதேப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com