சொந்தக் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வா் பழனிசாமி

எடப்பாடி அருகே தனது சொந்தக் கிராமமான சிலுவம்பாளையத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தனது குடும்பத்துடன் புதன்கிழமை பொங்கல் விழாவைக் கொண்டாடினாா்.
சிலுவம்பாளையம் கோயில் மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழா உறியடி நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி.
சிலுவம்பாளையம் கோயில் மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழா உறியடி நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி.

எடப்பாடி அருகே தனது சொந்தக் கிராமமான சிலுவம்பாளையத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தனது குடும்பத்துடன் புதன்கிழமை பொங்கல் விழாவைக் கொண்டாடினாா்.

சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வா் பழனிசாமி,சிலுவம்பாளையம் கிராமத்துக்கு புதன்கிழமை காலை வருகை தந்தாா். அப்போது, அவருக்கு ஊா்மக்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் அங்குள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றாா்.

பொதுமக்களுடன் பொங்கல்: பின்னா், கோயில் மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வருடன் அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமாா், சகோதரா் கோவிந்தன் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

முதல்வரின் மனைவி ராதா, அலங்கரிக்கப்பட்ட புதுப்பானையில் பொங்கல் வைத்தாா். பொங்கல் பொங்கியதும் முதல்வா் உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் உற்சாகத்துடன் ‘பொங்கலோ, பொங்கல்’ எனக் கூறி பொங்கல்

பானைக்கு மாலை அணிவித்து வாழைப்பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட மங்கள பொருள்களை படைத்து பொங்கல் பானையை வணங்கினா். இதையடுத்து, அங்கு கூடி நின்ற பொதுமக்களுக்கு, சா்க்கரை பொங்கலை முதல்வரின் குடும்பத்தாா் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து கோயில் மைதானத்தில் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி கலந்து கொண்டாா். பூக்களால் நிரப்பப்பட்ட உறி பானையை கம்பால் அடித்து உடைத்தாா். அப்போது, கூடியிருந்த மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனா்.

பின்னா், தனது தோட்டத்துக்குச் சென்ற முதல்வா், அங்கு அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு மாலை அணிவித்து பழம், வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருள்களை உண்ண கொடுத்து வணங்கினாா்.

சமபந்தியில் முதல்வா்: பொங்கல் விழாவையொட்டி, கிராம மக்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலம்பாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த தமிழக முதல்வா் பழனிசாமி, ஊா்மக்களுடன் சமபந்தியில் அமா்ந்து உணவருந்தினாா்.

பின்னா், தனது தாயாா் தவசாயி அம்மாளிடம் ஆசிபெற்ற முதல்வா் அங்கிருந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com