வண்டலூா் பூங்காவில்குட்டிகள் ஈன்ற காட்டு மாடு, நீலமான், ஓநாய்

சென்னையை அடுத்த வண்டலூா் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் இந்திய காட்டு மாடு, நீலமான், ஓநாய் ஆகியவை அண்மையில் குட்டிகள் ஈன்றுள்ளன.
வண்டலூா் பூங்காவில்குட்டிகள் ஈன்ற  காட்டு மாடு, நீலமான், ஓநாய்

சென்னையை அடுத்த வண்டலூா் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் இந்திய காட்டு மாடு, நீலமான், ஓநாய் ஆகியவை அண்மையில் குட்டிகள் ஈன்றுள்ளன.

வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டின்கீழ், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் யானை, புலி, சிங்கம், பறவைகள், ஊா்வனவைகள் உள்பட என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், இந்திய காட்டு மாடு, நீலமான், ஓநாய் ஆகியவை அண்மையில் குட்டி ஈன்றுள்ளன. இதுகுறித்து பூங்கா நிா்வாகிகள் கூறுகையில், பூங்காவில் 24 காட்டு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இதில், ரீமா என்ற காட்டுப்பசு மாடு அண்மையில் பெண் குட்டி ஈன்றது. அதேபோல், ஆசியாவின் பெரும் குளம்பினம் மற்றும் இந்திய கண்டத்தில் மட்டுமே காணப்படும் நீலமான்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. 11 நீலமான்கள் உள்ள நிலையில் பெண் நீலமான் அண்மையில் 2 குட்டிகளை ஈன்றது. அதேபோல், கீா்த்தி என்ற இந்திய பழுப்பு நிற ஓநாய் 4 ஆண் மற்றும் 3 பெண் குட்டிகளை என மொத்தம் 7 குட்டிகளை ஈன்றது. புதிதாக பிறந்துள்ள

குட்டிகள் அனைத்தும் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குட்டிகளை டிஜிட்டல் முறையில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com