Enable Javscript for better performance
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கைதான 2 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்- Dinamani

சுடச்சுட

    

    சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கைதான 2 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்

    By DIN  |   Published on : 21st January 2020 04:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    court_order

    சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

    களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8 ஆம் தேதி இரவு சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அப்துல்சமீம் (32), தவுபீக் (28) ஆகியோரை தனிப்படை போலீஸார் கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர்.

    இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரையும் 28 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai