பேசியதற்கு ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்? ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி

தான் பேசியதற்கு ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்? என்று நடிகர் ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

சென்னை: தான் பேசியதற்கு ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்? என்று நடிகர் ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் நான் பேசியது உண்மை, எனவே அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் செவ்வாயன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் எனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதை உருவ பொம்மைகள் உடையின்றி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்ட செய்தி அவுட்-லுக் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

எனவே இதை நான் ஆதாரத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். எனவே நான் உண்மையை தான் கூறினேன், இல்லாததை கற்பனையாக குறிப்பிடவில்லை. இதற்கு நான் மன்னிப்பு கேட்கவும், வருத்தம் தெரிவிக்கவும் முடியாது.

இது மறுக்கக் கூடிய சம்பவமில்லை, ஆனால் மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தான் பேசியதற்கு ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்? என்று நடிகர் ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, '1971-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடாத சமயத்தில், படத்துடன் செய்தி வெளியிடும் துணிவு துக்ளக்கிற்கு மட்டுமே இருந்தது என்று பேசிய ரஜினிகாந்த், தான் பேசியதற்கு ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com