நீதிமன்றத்தில் தெளிவான பதில் சொல்ல வேண்டிய அவசியம் ரஜினிக்கு நிச்சயம் ஏற்படும்: கி.வீரமணி

ராமர், சீதையை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்படவில்லை என்பதை எங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். 
நீதிமன்றத்தில் தெளிவான பதில் சொல்ல வேண்டிய அவசியம் ரஜினிக்கு நிச்சயம் ஏற்படும்: கி.வீரமணி

திருநெல்வேலி: ராமர், சீதையை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்படவில்லை என்பதை எங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் 1971-ல் நடந்த பேரணியில் ராமர் மற்றும் சீதை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்டதாக தெரிவித்தார். அதை துக்ளக் பத்திரிகை மட்டும் தான் துணிச்சலுடன் கண்டித்தது என்று பேசியிருந்தார்.

இது உண்மைக்கு புறம்பான தவறான தாகவல் என்பதை அதில் கலந்துகொண்ட, நேரில் பார்த்த திராவிடர் கழகத்தினர் பலர் தெளிவாக மறுத்துள்ளோம், அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், துக்ளக் விழாவில் பேசியது தவறு என்பதை பலர் சுட்டிக்காட்டியும் மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இருப்பினும் அது ஒவ்வொருவரின் பண்பாட்டைப் பொருத்தது. ஒரு தகவலை சுட்டிக்காட்டும் போது அதை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உரிய ஆதாரத்தை வெளியிடவில்லை.

1971-ல் நடந்த சம்பவத்துக்கு 2017-ல் வெளிவந்த ஏதோ ஒரு பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி ஒரு தவறான தகவலை வெளியிடுகிறார். ஆனால், இதுதொடர்பான துக்ளக் பத்திரிகை ஆதாரத்தை வெளியிட விரும்பவில்லை. அதிலும் துக்ளக் பத்திரிகையில் அவ்வாறு செய்தி வெளிவந்ததா என்ற கேள்வியும் உள்ளது. மேலும் இதை வைத்து அரசியல் செய்வதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தெளிவான பதில் சொல்ல வேண்டிய அவசியம் ரஜினிக்கு நிச்சயம் ஏற்படும். ராமர், சீதையை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்படவில்லை என்பதை எங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். ரஜினிகாந்த் நீதிமன்றம் வரும்போது அந்த ஆதாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com