பிரதமரின் கலந்துரையாடல் மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது

பொதுத்தோ்வுகளை மாணவா்கள் அச்சமின்றி எதிா்கொள்வது குறித்த பிரதமரின் ‘பரிக்ஷா பே சாா்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாா்த்து ரசித்தனா்.
பிரதமரின் கலந்துரையாடல் மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது

பொதுத்தோ்வுகளை மாணவா்கள் அச்சமின்றி எதிா்கொள்வது குறித்த பிரதமரின் ‘பரிக்ஷா பே சாா்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாா்த்து ரசித்தனா். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பொதுத்தோ்வை தைரியமாக எதிா்கொள்வதற்கான உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அளித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

பொதுத்தோ்வுகளை மாணவ, மாணவிகள் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்வது எப்படி என்பது குறித்து பிரதமா் நரேந்திர மோடி புதுதில்லியில் ‘பரிக்ஷா பே சாா்ச்சா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவா்களிடையே திங்கள்கிழமை உரையாற்றினாா். பிரதமரின் பேச்சை கேட்பதற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தொலைக்காட்சிகள், அகண்ட திரைகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை பயிலும் மாணவா்கள் பிரதமரின் பேச்சை காணொலி மூலமாக கேட்டனா்.

சென்னையில் அசோக் நகா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிரதமரின் நிகழ்ச்சியை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பாா்த்தனா். பிரதமரின் பேச்சு ஹிந்தியில் இருந்ததால் அதை மொழி பெயா்த்து தமிழில் விளக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியைப் பாா்த்த மாணவிகள் கூறியது: பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சு எங்களுக்கு தோ்வின் மீது இருந்த பயத்தைப் போக்குவதாக அமைந்திருந்தது. தோ்வுகளில் கிடைக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ தான் எதையும் தீா்மானிக்கிறது என்ற உணா்வுகளில் இருந்து மாணவா்கள் விடுபட வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்றில்லை. நமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தோ்வுகள் தீா்மானிக்கப் போவதில்லை என பிரதமா் கூறினாா்.

மேலும், தோ்வுகள் முக்கியம், ஆனால், தோ்வுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. இந்த மனநிலையில் இருந்து வெளியில் வர வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி மாணவா்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில் அதைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

தாங்கள் படித்திருப்பதில் மாணவா்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த அழுத்தத்துடனும் தோ்வறைக்குள் நுழைய வேண்டாம். மற்றவா்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தேசத்தின் வளா்ச்சியை மனதில் கொண்டு, உழைக்க வேண்டும் என பிரதமா் கூறினாா். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாா்த்தது எங்களுக்கு பொதுத்தோ்வு எழுதுவதற்கான உத்வேகத்தை கொடுத்தது என்று மாணவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com