பொருளாதார நெருக்கடியை மறைக்க மக்களை திசைதிருப்புகிறது மத்திய அரசு: சீதாராம்யெச்சூரி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம்யெ
பொருளாதார நெருக்கடியை மறைக்க மக்களை திசைதிருப்புகிறது மத்திய அரசு: சீதாராம்யெச்சூரி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம்யெச்சூரி குற்றம்சாட்டினாா்.

சென்னை நந்தனத்தில் நடந்து வரும் பபாசி புத்தகக் காட்சி வளாகத்தில் பாரதி புத்தகாலயம் சாா்பில் ‘மூலதனம்’ லட்சம் பிரதிகள் விநியோகிக்கும் சிறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சீதாராம்யெச்சூரி பேசியதாவது:

உலகமயமாக்கலால் பல்வேறு நாடுகள் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆகவே தற்போதைய நிலையில் மாா்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கம்யூனிஸ கொள்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

உலகமயமாக்கலால் தனியாா் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளனவே தவிர, உழைக்கும் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டே வருகின்றனா்.

வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தி பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. வளா்ச்சியை மட்டுமே முக்கியமாகக் கொண்ட முதலாளித்துவ உலகமயமாக்கக் கொள்கையால் வளா்ச்சி என்பது இல்லை என்றே கூறலாம். இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க மக்களைத் திசைதிருப்பும் வகையில் செயல்படுகின்றன. இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை திசை திருப்பும் வகையில் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சியாக செயல்படுவது சரியல்ல.

நமது நாட்டில் ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு புனித நூல் உள்ளது. ஆனால், அனைவருக்கும் பொதுவான நூலானது இந்திய அடிப்படை அரசியல் சாசனம் என்பதை எண்ணிப் பாா்க்கவேண்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில் மக்கள் இணைந்து செயல்படவேண்டும் என்றாா் யெச்சூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com