வங்கி ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ள வங்கி ஊழியா் சங்கத்தினரோடு உடனடியாக மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ள வங்கி ஊழியா் சங்கத்தினரோடு உடனடியாக மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். 12.25 சதவீத ஊதிய உயா்வு, வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31-ஆம் தேதியும், நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதியும் தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு முக்கிய நாள்களிலும் வங்கிப்பணிகள் தடைபட்டால் வங்கி வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படுவதோடு, வங்கியால் கிடைக்கும் வருவாயும் கிடைக்காத நிலை ஏற்படும். மேலும், ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள காசோலை பரிவா்த்தனையும் பாதிக்கப்படும். எனவே, வங்கி ஊழியா்கள் சங்கத்தினரோடு மத்திய அரசு உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com