ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிதி: வழக்குரைஞர் ஹென்றி பேட்டி

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும், பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்று வழக்குரைஞர் ஹென்றி தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிதி: வழக்குரைஞர் ஹென்றி பேட்டி

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும், பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்று வழக்குரைஞர் ஹென்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் 17 கட்ட விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், ஒரு நபர் கமிஷன் 18-வது கட்ட விசாரணை கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராகி விளக்கம் அளிக்க பத்திரிகையாளர்கள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சாட்சியங்களாக கருதப்படும் வழக்கறிஞர் ஹென்றி டிபேன், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, ஹரி ராகவன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.  

அதன்பேரில் ஒரு நபர் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்கையில்,

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சாட்சியமாக எனது தரப்பு விளக்கம் அளிப்பதற்காக 125 பக்கங்களைக் கொண்ட ஆவண குறியீட்டை விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி தாக்கல் செய்ய உள்ளேன். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு கூடுதலான நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். 

மேலும், பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வேலை அவமதிப்பது போன்று உள்ளது. எனவே அதனை மறுபரிசீலனை செய்து கல்வித் தகுதிக்கு ஏற்ப உரிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்த உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com