2020 சென்னைக்கு குடிநீர் பஞ்சமில்லாத ஆண்டாக அமையும்

பருவ மழைக் காலங்களில் எவ்வளவுதான் மழை பெய்தாலும், கோடை உக்கிரம் அடையும் போது சென்னை மக்கள் கலங்கிப் போவது குடிநீர் பஞ்சத்தை நினைத்துத்தான்.
2020 சென்னைக்கு குடிநீர் பஞ்சமில்லாத ஆண்டாக அமையும்


பருவ மழைக் காலங்களில் எவ்வளவுதான் மழை பெய்தாலும், கோடை உக்கிரம் அடையும் போது சென்னை மக்கள் கலங்கிப் போவது குடிநீர் பஞ்சத்தை நினைத்துத்தான்.

கடந்த 2019ம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, சென்னைவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். 

அதே சமயம், தென்மேற்கு பருவ மழையாகட்டும், வடகிழக்குப் பருவமழையாகட்டும் இரண்டுமே சென்னையில் கொட்டித் தீர்த்தது என்று சொல்லும் அளவுக்குப் பெய்யாவிட்டாலும், பரவலாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையினால், சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து தற்போது முக்கிய ஏரிகள் நிரம்பியுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, வீராணம் உட்பட சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் 5 ஏரிகளிலும் தற்போது இருக்கும் நீர் மட்டம் 7.5 டிஎம்சி (7,500 மில்லியன் கன அடி) எட்டியுள்ளது. இது மட்டுமல்லாமல், கண்டலேருவில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் நமக்கான பங்கு வந்து சேரும் போது பிப்ரவரி இறுதிக்குள் இது 8,000 மில்லியன் கன அடியாக இருக்கும். எனவே, நிச்சயமாக 2020 குடிநீர் பஞ்சம் மற்றும் வறட்சி இல்லாத ஆண்டாகவே சென்னைக்கு அமையும்.

அதே சமயம், தென்மேற்குப் பருவ மழை (சென்னைக்கு பெரிதாக மழை வாய்ப்பு இருக்காது) ஜூன் / ஜூலை மாதங்களிலேயே தொடங்கி விடும். எனவே மழை நீர் சேகரிப்பு மையங்களை சுத்தப்படுத்தி தயாராக வைத்துவிட வேண்டும். ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால் மே மாதத்திலும் அதற்கு முன்பாகவும் மழை பெய்யலாம். இல்லாவிட்டால் ஜூன் மாதத்தில்தான் மழை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com