பெரம்பலூர் அருகே சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் தர்னா

சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கி
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

பெரம்பலூர்: சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகே சுமார் 75 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மருதையாறு நீர்த்தேக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், குறைதீர் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா முறையாக பங்கேற்காததை கண்டித்தும் இந்த தர்னா போராட்டம் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  இந்த போராட்டத்தில் அச்சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com