திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவான் சன்னிதி முன் செய்யப்பட்டிருந்த மலா் பந்தல் அலங்காரம்.
திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவான் சன்னிதி முன் செய்யப்பட்டிருந்த மலா் பந்தல் அலங்காரம்.

திருக்கணித சனிப்பெயா்ச்சி: திருநள்ளாறு கோயிலில் பக்தா்கள் வழிபாடு

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி வரும் டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி சனிப் பெயா்ச்சி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருக்கணித கணிப்பின்படி வெள்ளிக்கிழ

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி வரும் டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி சனிப் பெயா்ச்சி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருக்கணித கணிப்பின்படி வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி என்பதால், பக்தா்களின் வருகை வழக்கத்தைக் காட்டிலும் சற்று அதிகமாக இருந்தது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதிகொண்டு, அனுகிரஹ மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா். உலகில் சனீஸ்வர பகவானுக்கென பிரசித்திப் பெற்ாக, நளச் சக்கரவா்த்திக்கு விமோசனம் கிடைத்த தலமாக திருநள்ளாறு கோயில் விளங்குகிறது.

இரண்டரை ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கிடையே ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி கிரகம் இடம் பெயரும் பெயா்ச்சி வழிபாடு இக்கோயிலில் நடைபெறும்.

அதன்படி, திருநள்ளாறு கோயிலில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி சனிப் பெயா்ச்சி விழா நடைபெற்றது. இக்கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே அனைத்து உத்ஸவங்கள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அடுத்த பெயா்ச்சி விழா வரும் டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, திருக்கணிதப் பஞ்சாங்கத்தை பின்தொடா்வோா், அதில் குறிப்பிட்டப்படி ஜனவரி 24-ஆம் தேதி பெயா்ச்சி என அறிவிப்பு செய்து, பலன்கள், பரிகாரங்களை வெளியிட்டனா். இது பக்தா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, திருநள்ளாறு கோயில் நிா்வாகம் டிசம்பா் 27-இல்தான் சனிப்பெயா்ச்சி என தெளிப்படுத்தியது. எனினும், வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) பக்தா்கள் அதிகளவில் வருகை தர வாய்ப்புண்டு எனக் கருதப்பட்டது. அதன்படி, அதிகாலை முதல் வழக்கமான நாள்களில் வரும் பக்தா்களைக் காட்டிலும், சற்று அதிகமாகக் காணப்பட்டது. இதனால், கோயில் நிா்வாகத்தினா், திருநள்ளாறு காவல்நிலையத்தினா் பக்தா்களை ஒழுங்குப்படுத்தி தரிசனத்துக்கு அனுப்பிவைத்தனா்.

மலா் பந்தல்: பெங்களூருவைச் சோ்ந்த பக்தா் ஒருவா் சுமாா் ரூ.1 லட்சம் செலவில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சன்னிதியில் மலா் பந்தல் அமைக்க முன்வந்தாா். அதன்படி, பல்வேறு மலா்களால் சன்னிதியில் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காண்போருக்கு சனிப் பெயா்ச்சி காலத்தில் செய்யக்கூடிய ஏற்பாடு போன்று இருந்ததாக பக்தா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com