திருக்கோஷ்டியூா் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில்16 அடி உயர சூலாயுதம் பிரதிஷ்டை

திருப்பத்தூா் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை 16 அடி உயரம் கொண்ட சூலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருக்கோஷ்டியூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட 16 அடி உயரம் கொண்ட சூலாயுதம்.

இந்த சூலாயுதத்தின் மேல் 5 தலை கொண்ட நாகமும், உடுக்கையும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூலாயுதத்தில் மேல் முனை, உடுக்கை, நாகம் ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த சூலாயுதம் வெள்ளிக்கிழமை காலையில் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னா் அம்மன் கோயில் சன்னதியின் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீா், தயிா் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருக்கோஷ்டியூா் மாதவன் பட்டாச்சாரியாா், கோயில் கண்காணிப்பாளா் சேவற்கொடியான், ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், ஸ்தபதி கிருஷ்ணமூா்த்தி, மேட்டுப்பட்டி சாமியாடி போஸ், கோயில் பட்டா் வாசு கிராமத்தினா் மற்றும் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com