கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்

குடியரசு தினத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61ஊராட்சிகளிலும் ஞாயிறன்று வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் மேற்பார்வையில் கிராம சபை கூட்டங்கள் திரளான பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்

குடியரசு தினத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளிலும் ஞாயிறன்று வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் மேற்பார்வையில் கிராம சபை கூட்டங்கள் திரளான பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.

புதுவாயல் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.அற்புதராணி சதீஷ்குமார் தலைமையிலும், துணைத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் பா.பாண்டியன் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கலையரங்க கட்டிட வசதி, ஊராட்சி முழுக்க சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்த கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.

கண்ணம்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர் சதீஷ் தலைமையிலும், துணைத் தலைவர் விக்னேஷ்குமார்,  ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிக்கு சமுதாயக்கூடம் கட்டவும், 2 ஆண்டில் குடிசை இல்லா ஊராட்சியாக கண்ணம்பாக்கத்தை மாற்றவும் தீர்மானம் இயற்றப்பட்டது

பெருவாயலில் ஊராட்சித் தலைவர் ஆர்.ராஜசேகர் தலைமையிலும், துணை தலைவர் ரஜினி, ஊராட்சி செயலாளர் பிரபு, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.அபிராமன் முன்னிலையிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை பங்கேற்றார். கூட்டத்தில் பெருவாயல் பகுதியில் 3 குளங்களை  தூர்வாரி சீரமைப்பது, பெருவாயல் காலனியில் அங்கன்வாடி மையம் கோரியும், நைனியான்குப்பம் பகுதியில் சுடுகாட்டு வசதி கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. 

கீழ்முதலம்பேடு ஊராட்சி கவரப்பேட்டையில் ஊராட்சித் தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் தலைமையிலும், துணை தலைவர் தேவி கஜேந்திரன், ஊராட்சி செயலாளர் சாமுவேல் முன்னிலையில் நடைபெற்றக் கூட்டத்தில் கவரப்பேட்டையில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர்மேல்நிலைத்தொட்டி அமைக்கவும், கீழ் முதலம்பேடு சாலை ஆக்கிரமிப்பை அகற்றவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

பன்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சீ.சீனிவாசன் தலைமையிலும், துணைத் தலைவர் சாந்தி சிவக்குமார், ஊராட்சி செயலாளர் சுகுமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்பாக்கத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்றும், பன்பாக்கம் காலனியில் குடிநீர் மேல்நிலை தொட்டி, ஊராட்சியில் சிமெண்ட் சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.

தண்டலச்சேரியில் ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ் தலைமையிலும், துணை தலைவர் கற்பகம் ஏழுமலை, ஊராட்சி செயலாளர் ஏ.பொன்னுசாமி முன்னிலையிலும் சுமார் ஆயிரம் பேர்  பங்கேற்ற கூட்டத்தில் ஊராட்சிக்கு வருவாய் ஆய்வாளர் வாரத்திற்கு ஒருநாள் வருகை தர வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள தொகுப்பு வீடுகளுக்கான பாக்கி தொகையை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விரைந்து பெற தீர்மானம் இயற்றப்பட்டது.

கெட்ணமல்லியில் ஊராட்சித் தலைவர் நதியா ரவி தலைமையிலும், துணை தலைவர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர் கணபதி முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்கவும், ஊராட்சியில் உயர் கோபுர விளக்கு ஏற்படுத்தவும், துணை சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை வசதி கோரியும் தீர்மானம் இயற்றப்பட்டது.

சிறுபுழல்பேட்டையில் ஊராட்சித் தலைவர் சுசிலா மூர்த்தி தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், துணைத் தலைவர் சு.வெற்றிவேந்தன், ஊராட்சி செயலாளர் மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ வசதி, பேருந்து வசதி, சுற்றுசூழலை மாசடைய செய்யும் தொழிற்சாலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை கோரியும் தீர்மானம் இயற்றப்பட்டது.

புதுகும்மிடிப்பூண்டியில் ஊராட்சித் தலைவர் அஷ்வினி சுகுமாறன் தலைமையிலும், துணைத் தலைவர் எல்லப்பன், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன்,ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் புதுப்பேட்டையில் ரேஷன் கடை அமைக்கவும் , புதுகும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் 4வருடங்களாக மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரியும் தீர்மானம் இயற்றப்பட்டது.

பெத்திக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் ஜீவா  செல்வம் தலைமையிலும், துணைத் தலைவர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர் முன்னிலையிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெத்திக்குப்பத்தில் விளையாட்டு மைதானம் வசதி கோரியும், பூபால நகரில் பூங்கா ஏற்படுத்த கோரியும், அம்மா குடிநீர் தொழிற்சாலையால் பெத்திக்குப்பத்தில் நிலத்தடி நீர் பாதித்துள்ளதால் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.

பெரிய ஓபுளாபுரத்தில் ஊராட்சித் தலைவர் செவ்வந்தி மனோஜ், துணைத் தலைவர் ஜி.இன்பவள்ளி, ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை கேசவன், ஊராட்சி செயலாளர் நாராயணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சின்ன ஓபுளாபுரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் வசதி, செயல்படாமல் இருக்கும் நூலகத்தை செயல்படுத்த கோரியும், ஊராட்சியில் ஆக்ரமிப்பில் உள்ள இடத்தை மீட்டு விளையாட்டு மைதானம் ஏற்படுத்த தீர்மானம் இயற்றப்பட்டது.

ஈகுவார்பாளையத்தில் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதே போல ஊராட்சித் தலைவர்களான எகுமதுரை ஸ்ரீபிரியா மகேந்திரன், ஆரம்பாக்கம் தனசேகர், ஆத்துப்பாக்கத்தில் அமிர்தம் வேணு, தேர்வழி கிரிஜா குமார், சாணபுத்தூர் அம்பிகா பிர்லா, பல்லவாடா லட்சுமி பன்னீர்செல்வம், கண்ணன்கோட்டை கோவிந்தசாமி, செதில்பாக்கம் உமாமகேஷ்வரி குப்பையா, பாதிரிவேடு என்.டி.மூர்த்தி, மற்றும் மாநெல்லூரில் ஊராட்சித் தலைவர் லாரன்ஸ், ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com