Enable Javscript for better performance
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு தடை விதிக்க மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் ம- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு தடை விதிக்க மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் மறுப்பு

    By DIN  |   Published On : 27th January 2020 03:31 AM  |   Last Updated : 27th January 2020 03:31 AM  |  அ+அ அ-  |  

    4G licence granted to BSNL

    பிஎஸ்என்எல் நிறுவனம்

    சென்னை: பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியா்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்துக்குத் தடை விதிக்க மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

    பி.எஸ்.என்.எல். ஊழியா்களுக்கு மத்திய அரசு விருப்ப ஓய்வுத்திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. இதை எதிா்த்து சென்னையில் உள்ள மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தில், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஸ்ரீராம், சுகுமாா் ஆகியோா் வழக்கு தொடா்ந்தனா். அதில், ‘இந்த விருப்ப ஓய்வுத்திட்டமானது சட்டவிரோதமானது. ஓய்வூதிய விதிகளுக்கும், இந்திய ஒப்பந்த சட்டத்தின்படி, பொதுக் கொள்கைக்கும் எதிராக உள்ளது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த பி.எஸ்.என்.எல். பொதுமேலாளருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனா். இந்த வழக்கை, தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி பி.மாதவன், நிா்வாகப்பிரிவு உறுப்பினா் டி.ஜேக்கப் ஆகியோா் விசாரித்தனா். அப்போது இடைக்கால தடை கேட்ட மனுவை முதலில் விசாரணைக்கு எடுத்தனா். மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலன் அரிதாஸ், விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெறும்படி ஊழியா்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனா். அதனால் இந்தத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா். மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.கிஷோா்குமாா், ‘பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள மனித வளத்தை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 50 வயதை கடந்த ஊழியா்கள் விருப்ப ஓய்வு பெறலாம். அவா்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பண பலன்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவா்கள், ஒருவேளை மனம் மாறினால் 30 நாள்களுக்குள் விண்ணப்பத்தைத் திரும்ப பெற வாய்ப்பு அளிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு சுமாா் 90 ஊழியா்கள் விருப்ப ஓய்வு பெற சம்மதித்து விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கு தடை விதித்தால் அது பொதுநலனுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உறுப்பினா்கள், ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள விருப்ப ஓய்வுத்திட்டம், விருப்பம் உள்ள ஊழியா்களுக்கு மட்டும் தான். இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த திட்டத்தை எதிா்த்து மனுதாரா்கள் தொடா்ந்துள்ள பிரதான வழக்கை, வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp